தூத்துக்குடியில் நேற்று வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பாஜக கட்சியினர் வந்தனர். அப்போது, மக்கள் ஒற்றுமை பிரசாரப் பயணம் மேற்கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வஉசி சிலை முன்பாக தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினர்.