வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் வாசவி மஹால் முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் நிரம்பி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு நடு ரோட்டில் குழி இருப்பது தெரிவதில்லை. இதனால் சாதாரணமாக செல்லும் பொழுது திடீரென குழிக்குள் இறங்கி ஐந்திற்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். இதுகுறித்து வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.