சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விநாயகர் சிலைகள் இன்று பாஜக மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் தலைமையில் மேளதாளங்களுடன், காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலமாகமுக்கிய வீதிகளில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர், சிலைகள் சிவகங்கை சிவன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் மரபுப்படி கரைக்கப்பட்டன.