தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ. பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.