வேடசந்தூர் ஆத்துமேட்டில் வட மாநில தொழிலாளர் ஒருவர் மது போதையில் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டார். வாகனங்களை அடிப்பதும் போவோர், வருவோர் என அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து கை கால்களை கட்டி வைத்தனர். ஆனாலும் அவர் உருண்டு புரண்டு கலாட்டா செய்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர் குறித்து விசாரணை நடத்தி அவருடன் தங்கி இருக்கும் ஆட்களை வரவழைத்து ஆட்டோவில் தூக்கி போட்டு அனுப்பி வைத்தனர்.