வேடசந்தூர் அருகே அணைப்பட்டி பகுதியில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது முன்னாள் சென்று கொண்டிருந்த ஈச்சர்லாரி திடீரென பிரேக் போட்டதால் கார் லாரியின் பின்பக்கமாக மோதி நொறுங்கியது. அதே நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி காரின் பின்பக்கமாக மோதியதில் காரின் பின்பக்கமும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அனைவரும் காயம் இன்றி தப்பினர்.