வேடசந்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெற்றி செல்வம் தலைமையில் சந்தைப்பேட்டையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்த அன்னதானம் வழங்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.