சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் திடீரென ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியதால், அங்கு நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.