தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் மோரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி மழைக்காலத்தில் தண்ணீர் வடிய வழியின்றி சாகுபடி வயல்களை சூழ்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதை உடன் சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.