வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னு நூற்பாலை தொழிலாளி. இவர் தனது ஊரில் சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது பழனியில் இருந்து வேடசந்தூரை நோக்கி அழகாபுரி அருகே உள்ள குளத்துபட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஓட்டி வந்தார் கார் சின்னுமீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னு காரின் கண்ணாடியில் பலமாக மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் தர்மர் விபத்து குறித்து விசாரணை.