நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஓவேலி மூலக்காடு பகுதியில் சென்ற அரசு பேருந்தை சாலையில் நின்றிருந்த காட்டு யானை திடீரென காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது. இருப்பினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது