அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும், திமுகவின் கிளைக் கழக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வருகிற சட்டமன்றத் தேர்தலின் போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.