108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்தி வழங்காததது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.