மதுரை கள்ளழகர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இந்த பணியில் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கம் 77 கிராம் 500 மில்லி கிராம், வெள்ளி 1 கிலோ 140 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த தகவல் இன்று மாலை வெளியாகி உள்ளது