தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுவாமி செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதை தொடர்ந்து இரண்டு கால யாக சாலை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.