தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வேடசந்தூர் அய்யனார் நகர் பகுதியில் சென்ற பொழுது லாரியின் புகை குழாயில் பயங்கரமான புகை வந்தது. இதனால் சாலை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை அறிந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்பொழுது ஆந்திராவில் இருந்து கேரளாவை நோக்கி மாங்காய் லோடு ஏற்றி சென்ற கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் லாரியின் பின்பக்கமாக மோதி நொறுங்கியது.