வேடசந்தூர் அருகே உள்ளது அகரம் கிராமம் சுக்காம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிராம பெண்கள் அனைவரையும் மிரட்டுவதாக கூறி கிராம பெண்கள் அனைவரும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்தனர். இதனால் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூட்டமாக வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.