சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தரிசனம் செய்தார். இன்று குன்றக்குடியில் நடைபெறும் 45வது குருமகா சன்னிதானம் ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அவர், அதற்கு முன்பாக பிள்ளையார்பட்டி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.