ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் - கீரனூர் சாலையில் மணல்மேடு என்ற இடத்தில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கீரனூரை சேர்ந்த செல்லப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மேற்படி சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.