திருநெல்வேலியில் zoho ஐடி கம்பெனி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, பாஜக கட்சியினரும் பூங்கெடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.