தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2.8.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ”நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் சுமார் 1,256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம் 17 சிறப்பு மருத்துவ துறைகள் வாயிலாக கட்டணமில்லா மருத்துவ சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது