சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று, தமிழ்நாடு இடம்பெயரும் மக்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாணிப்பட்டி கிராமத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்டன், அவரது மனைவி முனியம்மாள் மற்றும் 11 வயது மகன் ஆகியோர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.