சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளையும், வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளையும், மானாமதுரை தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரக் குளத்தில் கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அந்தக் குளத்தில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல், ஓரிடத்தில் மட்டும் கழிவுநீர் தேங்கியிருந்தது. இதனால் அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க முடியாத நிலை ஏற்பட்டது.