அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைப்பெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், நரம்பியல் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டனர்.