சிவகங்கை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை பெய்தும் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது.