வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை பிள்ளம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். தற்பொழுது திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அருள்விஜிலட்பிரபா. இருவரும் நாள்தோறும் காலை நேரத்தில் பேருந்தில் ஒன்றாக செல்வது வழக்கம். இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வீட்டிற்கு தெரிந்தால் தங்களது காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.