அரியலூர் நகர் பகுதியில் கோசி நகரில் அமைந்துள்ள மதுர காளியம்மன் திருக்கோவிலின் பால்குட திருவிழா இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மதுர காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யபட்டு தீபாராதனை நடைப்பெற்றது.