தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று காலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. இதில் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடன் நிரப்பப்பட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது பகல் கொள்ளை ஆகும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.