தஞ்சை மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2073 புகார்கள் பெறப்பட்டுள்ளன இது தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட 2073 புகார்களை பொதுமக்கள் இணைய வழியில் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது