வேடசந்தூர் தாலுகா எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகனத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அய்யம்மாள். இவர் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அதிகாலை 4:00 மணிக்கு கடையை திறந்து வைத்திருந்த பொழுது வந்த மர்ம நபர்கள் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி பவித்ரா சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து எரியோடு போலீசில் ஒப்படைத்தனர்.