அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 11 வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதனை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். மேலும் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.