சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மரக்கடை சந்து பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மூர்த்தி (46). ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அஹமத், மதுபோதையில் ஹோட்டல் அருகே நின்று அவதூறாக பேசி வந்துள்ளார். அப்போது, மூர்த்தி அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தியதில், ஆவேசம் அடைந்த ரியாஸ் அஹமத், அவரை அவதூறாக பேசியதுடன், ஹோட்டலில் இருந்த பலகாரம் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை கைகளால் உடைத்து, கண்ணாடி துண்டுகளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.