புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர். பூவை மூர்த்தியார் (எ) பூவையார் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.