வேடசந்தூர் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுற்றியுள்ள கடைகள் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் எம்எல்ஏ காந்தராஜன் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அய்யனார் கோவிலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று 15 துறை அதிகாரிகளிடமும் மக்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.