சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அமுதா. அவர் மறவமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, TN 45 BJ 0399 என்ற எண் கொண்ட டாரஸ் லாரியில் அரசு அனுமதி இன்றி 6 யூனிட் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.