சிவகங்கை நகராட்சி 24வது வார்டு, தெற்கு மார்க்கெட் வீதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சாக்கடை கலந்த தண்ணீர் வழங்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.