தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா நகர காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது வட்டார தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ராஜீவ் காந்தியின் பெருமைகளை பரப்புரை செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.