தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணை கால்வாயில் 20 கண் பாலம் அமைந்துள்ளது என்று மதியம் 1:30 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த இளம்பெண் கைக்குழந்தை, மற்றும் ஐந்து வயது சிறுவன் 14 வயது சிறுமியுடன் பொதுமக்கள் கண் முன்பே ஆற்றிற்குள் பாய்ந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் ஆற்றில் குதித்து மூன்று பேரை மீட்ட போதும் அவர்கள் இறந்துவிட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் நிலை என்னவென யாருக்கும் தெரியவில்லை. இறந்தவர்கள் விபரமும் தெரியவில்லை.