புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கத்தக்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் அய்யனார் உள்ளிட்ட ஆலயத்தின் வருடாபிஷேக நிகழ்வை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன. நூற்றுக்கு மேற்பட்ட மாட்டு வண்டி போட்டிகள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது.