வேடசந்தூர் இந்து தமிழர் கட்சியின் சார்பில் எல்லை காளியம்மன் கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம் கிளம்பி ஆத்துமேடு, பஸ் நிலைய ரவுண்டானா, மார்க்கெட் ரோடு வழியாக அடைக்கனூர் அருகே உள்ள குடகனாற்றில் சிலை கரைக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிலைகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். தாரை தப்பட்டை வான வேடிக்கை முழங்க ஊர்வலம் சென்றது.