அரியலூர் மாவட்ட ஆயுதபடை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி, அரியலூர் ஆயுதபடை மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் 116 பேர் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட எஸ்பி, அவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.