சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தை சேர்ந்த தவச்செல்வம் (28) தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இன்று வேலை முடித்து, மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென அவரை சரமாரியாக வெட்டினர். இதனால் தவச்செல்வம் கடுமையாக காயமடைந்து நிலைகுலைந்தார்.