சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கொல்லங்குடியில் அமைந்துள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, யாதவர் சங்கம் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவிகளாக நடைபெற்ற போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன