அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு மற்றும் தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி அரியலூர் அண்ணா சிலையருகே இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது அண்ணா சிலை, தேரடி, சத்திரம், மாதா கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.