நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி குயிண்ட் பகுதியில் இன்று காலையில் ஸ்கூட்டரில் இருவர் கூலி வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென சாலையில் வந்த காட்டு யானை தாக்கியதில் 38 வயதான சம்சுதீன் (எ) மெகபூப் என்பவர் உயிரிழந்தார். செல்லதுரை என்பவர் உயிர் தப்பினார்