சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணபோஸ். அவர் கண்டணி கரை ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காளையார்கோவில் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (19), சேதாம்பால் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (19) ஆகிய இருவரும் கையில் வாள் பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர்.