தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மதியம் 12 மணி அளவில் திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை நிறைவடைந்து 1.45 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் மதுபான பிரியர்கள் காத்திருந்து காத்திருந்து என சோக கீதம் பாடினர்.