வேடசந்தூர் வடமதுரை ரோடு சினேகா மஹாலில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் வேடசந்தூர் வட்ட 36 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேடசந்தூர் வட்டார தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் தங்கவேலு வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் பழனிச்சாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். வட்டச் செயலாளர் மருதையப்பன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.