சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள பூவந்தி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. குறிப்பாக, அதிகளவில் பிரசவங்கள் நடைபெறும் மருத்துவ மையமாகவும் இது திகழ்கிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக வயர் எரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மருத்துவமனை முழுவதும் இருட்டில் மூழ்கியுள்ளது.