நடிகர் சூரி தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது இரட்டை சகோதரர் லட்சுமணன் உடன் சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஸ்டாலின் மீது வைத்த விமர்சனம் குறித்து சூரி பேசும்போது, எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாம் வேண்டும். அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும் என்று பேசினார்